தொல்லியல் துறைக்கு அஜ்மீர் கோர்ட் உத்தரவு Ajmer Dargah | Issue| Shiv temple | Court hearing |
ராஜஸ்தானின், அஜ்மீரில் சூபி ஞானி காஜா மொய்தீன் சிஷ்தி அடக்கம் செய்யப்பட்ட இடம் தர்காவாக செயல்படுகிறது. சிவன் கோயிலை இடித்து தர்கா கட்டப்பட்டதாக கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க வேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் அப்போதைய முதல்வர் அசோக் கெலாட்டிடம் மனு அளித்தன. அரசு நடவடிக்கை எடுக்காததால் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா அஜ்மீர் சிவில் கோர்ட்டில் கடந்த செப்டம்பரில் மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி மன்மோகன் சண்டேல் முன் விசாரணைக்கு வந்தது. தர்காவின் ஜன்னல்களில் ஸ்வஸ்திக் மற்றும் தாமரை சின்னங்கள் தெரிகின்றன. இந்துக்கள் வணங்கும் சின்னங்கள் இருப்பதால் தர்கா சிவன் கோயிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து கள ஆய்வு நடத்த தொல்லியல் ஆய்வு துறைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து சேனா சார்பில் வாதிடப்பட்டது. 1910ல் வெளியான புத்தகம் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.