அஜ்மீர் ஷெரீப் தர்காவில் பிரம்மாண்ட ஏற்பாடு Langar organised by Ajmer Dargah| PM Modi Birth Day Cele
ராஜஸ்தானின் அஜ்மீரில் புகழ்பெற்ற அஜ்மீர் ஷெரீப் தர்கா உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த தர்காவில் உலகின் மிகப் பெரிய பிரமாண்ட சமையல் பாத்திரம் உள்ளது. இதில், ஒரே நேரத்தில் 4,000 கிலோ உணவு சமைக்க முடியும். பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ல் இந்த பிரமாண்ட பாத்திரத்தில் உணவு சமைத்து ஏழைகள், பொதுமக்களுக்கு அன்னதானம் செய்ய தர்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில், அரிசி, நெய், உலர் பழங்கள் பயன்படுத்தி, 4,000 கிலோ உணவு தயாரிக்கப்படும். அன்றிரவு தர்காவில் சிறப்பு தொழுகை, பக்தி பாடல்கள் இடம் பெறும். பிரதமர் பூரண உடல் நலத்துடன் பல ஆண்டுகள் வாழ அவருக்காக இரவு முழுதும் நடக்கும் துவாவில் குரான், புனிதர்களின் அருள்மொழிகள் வாசிக்கப்படும்.