இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE அதிபர்! Al Nahyan | UAE President| PM Modi
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான முகமது பின் ஜாயத் அல் நயான் டில்லி வந்தார். ஏர்போர்ட் சென்ற பிரதமர் மோடி, அவரை கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஷேக் முகமதுவை பிரதமர் மோடி காரில் அழைத்துக் கொண்டு ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஷேக் முகமது சந்தித்தார். இதன் பின்னர், பிரதமர் மோடியும், ஷேக் முகமதுவும் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். முகமது பின் ஜாயத் அல் நயான், யுஏஇ அதிபரான பிறகு இந்தியா வருவது இது மூன்றாவது முறை. இந்த சந்திப்பின் போது, அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, எரிசக்தி, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்தப்பட்டது. இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், தூதுக்குழு அளவிலும் பேச்சு நடத்தியதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். குஜராத்தின் தொலேரா பிராந்தியத்தில் முதலீடு, இயற்கை எரிவாயு விநியோகம், விண்வெளி ஒத்துழைப்பு, வர்த்தக விரிவாக்கம் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களும் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகின. மேற்கு ஆசியாவில் போர் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், யுஏஇ அதிபரின் இந்த மூன்று மணி நேர பயணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.