/ தினமலர் டிவி
/ பொது
/ ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு | Alanganallur | Jallikattu
ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு | Alanganallur | Jallikattu
அலங்காநல்லூர் வாடி வாசலில் காளை உரிமையாளர்கள் தர்ணா! உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. காலை 7 மணிக்கு துணை முதல்வர் உதயநிதி போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இச்சூழலில், ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் காளைகளுக்கு ஜல்லிக்கட்டில் வாய்ப்பு தராமல் புறக்கணிக்கப் படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஜன 15, 2025