உலகின் முதல் ஏஐ அமைச்சர் டியெல்லா! சக்சஸ் ஆகுமா? | Albania | | Diella | World's 1st AI 'Minister'
அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக எடி ரமா பொறுப்பேற்றார். இந்த சூழலில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டத்தின் போது, ஏஐ அமைச்சருக்கான அறிவிப்பை பிரதமர் எடி ரமா வெளியிட்டுள்ளார். உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிவிக்கும் நாடாக அல்பேனியா மாறி உள்ளது. இதுகுறித்து எடி ரமா பேசுகையில், ஏஐ மூலம் டியெல்லா என்ற அமைச்சரும் இந்த அரசில் அங்கம் வகிப்பார். அல்பேனிய மொழியில் இதன் அர்த்தம் சூரியன். மெய்நிகர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ, அரசு ஒப்பந்தப் பணிகள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நிர்வகிக்க உள்ளது. இதன் மூலம் 100 சதவீத ஊழல் முறைகேடுகள் இன்றி, ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பிக்கப்படும். ஒவ்வொரு பொது நிதியும் முற்றிலும் வெளிப்படையானதாக அமையும் என்றார். சென்ற ஜனவரியில் அந்நாட்டு அரசின் டிஜிட்டல் உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட டியெல்லா, இதுவரை 36,600 டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் 1,000 சேவைகளை வழங்கியுள்ளது.