உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்துக்களை உலுக்கிய அமெரிக்க பகீர் | alexander duncan | texas hanuman statue | false hindu god issue

இந்துக்களை உலுக்கிய அமெரிக்க பகீர் | alexander duncan | texas hanuman statue | false hindu god issue

அமெரிக்கா, இந்தியா இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்னை, வரி பஞ்சாயத்துக்கு நடுவே மத ரீதியிலான பிரச்னை ஒன்று இப்போது வெடித்துள்ளது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர், அமெரிக்கா கிறிஸ்தவ நாடு; இங்கு எப்படி பொய்யான இந்து மத கடவுள் சிலையை நிறுவலாம் என்று மக்களை தூண்டி விட்டது தான் இந்த பிரச்னைக்கு காரணம். அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சுகர் லேண்ட் என்ற இடத்தில் அஷ்டலட்சுமி கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 90 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சிலை திறக்கப்பட்டது. இதற்கு ஒற்றுமை சிலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை வைத்து தான் டிரம்ப் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் அலெக்சாண்டர் டங்கன் என்பவர் இப்போது சர்சையை கிளப்பி உள்ளார். 90 அடி அனுமன் சிலை தொடர்பான வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த அலெக்சாண்டர், ‛ஒரு பொய்யான இந்து கடவுளின் பொய்யான சிலையை ஏன் டெக்சாஸில் வைக்க நாம் அனுமதிக்கிறோம். அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடு என்று கூறி உள்ளார். அவரது பதிவு இந்துக்களையும் அமெரிக்க வாழ் இந்தியர்களையும் கொதிக்க வைத்து விட்டது. அலெக்சாண்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, டிரம்பின் குடியரசு கட்சியிடம் இந்து அமெரிக்க அறக்கட்டளை தங்களது கண்டனத்தை பதிவு செய்தது. ‛பிரிவினைக்கு எதிரான உங்கள் கட்சியின் வழிகாட்டுதல்களை, உங்கள் கட்சியை சேர்ந்த டெக்சாஸ் செனட் வேட்பாளர் அலெக்சாண்டர் பகிரங்கமாக மீறி இருக்கிறார்; மோசமான இந்து வெறுப்பை காட்டி இரு்கிறார். முதலில் அவரை ஒழுங்குப்படுத்துங்கள் என்று சாடியது. அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் தபேஷ் யாதவும் அலெக்சாண்டரை கண்டித்தார். நான் காலம் காலமாக குடியரசு கட்சிக்கு தான் ஓட்டு போடுகிறேன். ஆனால் அவர் நம் பழமையான கட்சியின் கொள்கைகளை மீறி பேசுவது நாட்டுக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது என்று கூறினார். அலெக்சாண்டருக்கு எதிராக தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது பற்றி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த அலெக்சாண்டர், நான் சிலையை சிலை என்று தானே கூறினேன். அதில் என்ன தப்பு என்று மீண்டும் வாய் கொழுப்பில் பேசினார். அதோடு பைபிளில் உள்ள 3 வசனங்களையும் கூறினார். அதில், என்னையன்றி உனக்கு வேற தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்ரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள் என்று எழுதினார். இப்படி தொடர்ந்து அவர் தனது கருத்தை நியாயப்படுத்தி இந்துக்களுக்கு எதிராக பைபிள் வசனத்தை எழுதி வருகிறார். முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவதூறு பரப்புகிறார். அலெக்சாண்டரின் அனுமன் பதிவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மட்டும் இன்றி, அமெரிக்கர்களும் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உலகின் மிகவும் பழமையான மதம் இந்து. இந்தியாவில் கோடி கணக்கில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்களிடம் அலெக்சாண்டர் நடப்பது போல் எந்த இந்துவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது இல்லை. தங்கள் மதத்தை இன்னொருவரிடம் திணிக்காத மதம் இந்து மதம். அவர்களை இப்படி பேசுவது அமெரிக்காவுக்கு தலைகுனிவு. அமெரிக்கா ஒன்றும் கிறிஸ்தவர்களின் நாடு அல்ல. இது ஒரு மதசார்பற்ற நாடு என்று அமெரிக்கர்களே அலெக்சாண்டரை வெளுத்து வாங்குகின்றனர். நடக்க இருக்கும் செனட் சபை தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டெக்சாஸில் போட்டியிடுகிறார் அலெக்சாண்டர். இப்படியே போனால் அவர் வெல்வது சந்தேகம் தான் என்கின்றனர். #TexasHanumanStatue #FalseHinduGod #TrumpParty #RepublicanLeader #AlexanderDuncan #TexasPolitics #HinduSymbolism #ReligiousDebate #CulturalControversy #GOP #PoliticalIssues #FaithAndPolitics #StatueControversy #CommunityReaction #ReligionInPolitics #PoliticalLeadership #HinduismDiscussion #PublicArtDebate #CulturalIdentity

செப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை