உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சபாநாயகர்கள் மாநாட்டில் எதிர்கட்சிகள் மீது ரிஜிஜு தாக்கு

சபாநாயகர்கள் மாநாட்டில் எதிர்கட்சிகள் மீது ரிஜிஜு தாக்கு

டில்லியில் முதல் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு இன்று துவங்கியது. 2 நாள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கிவைத்தார். மாநாட்டை வாழ்த்தி, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார். அவர் கூறியதாவது பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகள், பார்லிமென்ட் ஜனநாயகத்தின் மையப்புள்ளிகளாக உள்ளன. அவை முறையாக செயல்படவில்லை என்றால் ஜனநாயகத்தின் மீது கேள்வி எழும். பார்லிமென்ட் மற்றும் சட்ட சபைகள் துடிப்பாக செயல்படுவது மிகவும் முக்கியம். பார்லிமென்ட்டில் கருத்து மோதல்கள் இல்லாவிட்டால் வேறு எங்கு இருக்க முடியும். பல மாறுபட்ட எண்ணங்கள் உள்ளவர்கள் ஒன்று கூடும் இடம்தான் பார்லிமென்ட். அதனால் அவர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்படத்தான் செய்யும். அப்படி செய்வதாலேயே அவர்கள் நாட்டின் செயல்பாடுகளை தடுத்து விடுவார்கள் என்பது அர்த்தம் இல்லை. எதிர்ப்பது என்பது வேறு, தடுப்பது என்பது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. எதிர்ப்பு தெரிவிப்பது சபை உறுப்பினர்களின் உரிமை. அதற்காக அவர்களால் நாட்டின் செயல்பாட்டை தடுத்துவிட முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். #Kiren Rijiju # All India Speakers Conference# Parliament # #Democracy #KirenRijiju #Parliament #Assemblies #PoliticalDiscourse #Governance #NationalNews #Accountability #PublicInterest #DemocraticFunction #India #MinisterialComments #PoliticalDialogue #ElectedRepresentatives #CitizenEngagement #LegislativeProcess #DemocraticValues #GovernmentResponsibility #CivicParticipation #CurrentAffairs

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ