நம்பவே முடியல: 'புஷ்பா 2' ஹீரோயின் ரஷ்மிகா கவலை
ஹைதராபாத்தில் கடந்த 4ம் தேதி புஷ்பா-2 படம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது, அப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் அங்கு சென்றிருந்தார். அவரை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்தார். அவரது 8 வயது மகன் காயமடைந்தான். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்தனர். தெரிந்தே மரணத்தை விளைவித்தல், திட்டமிட்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
டிச 13, 2024