நெரிசலில் பெண் இறந்த சம்பவத்தில் போலீஸ் அதிரடி | Hero Allu Arjun Arrest
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியானது. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த 4ம் தேதி திரையிடப்பட்டது. படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு வரும் தகவல் பரவியதால், அவரை பார்க்கும் ஆவலில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். இரவில் தியேட்டருக்கு வந்த அல்லு அர்ஜுன், கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவை காண ரசிகர்கள் அடித்துபிடித்து தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயங்கி விழந்தனர். இதில் 35 வயதான ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது 8 வயது மகன் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார்.
டிச 13, 2024