உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரமாண்டமாக நடந்த ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்ச்செஸ் திருமணம் Amazon founder Jeff Bezos|Marriage

பிரமாண்டமாக நடந்த ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்ச்செஸ் திருமணம் Amazon founder Jeff Bezos|Marriage

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் Jeff Bezos. அவருடைய இன்றைய சொத்து மதிப்பு 18.45 லட்சம் கோடி ரூபாய். பெசோஸின் முதல் திருமணம் 1993ல் மெக்கன்சி ஸ்காட் என்பவருடன் நடந்தது. 25 ஆண்டு திருமண வாழ்வு இருவருக்கும் கசந்ததால் 2019ல் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்காக பெசோஸ் 2.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அமேசான் பங்குகளை பெற்றார். விவாகரத்துக்கு முன்பே பெசோஸ் பிரபல பத்திரிகையாளரும் டிவி தொகுப்பாளருமான லாரன் சான்ச்செஸ் உடன் பழகி வந்தார். மெக்கன்சியை விவாகரத்து செய்த பிறகு அவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினார். 2023ல் நிச்சயதார்த்தம், திருமணத்துக்கான சட்டப்பூர்வ ஒப்பந்தமும் செய்திருந்தார். இப்போது 61 வயதாகும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், 55 வயதான லாரன் சான்ச்செஸை , இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று திருமணம் செய்துகொண்டார். 3 நாட்கள் நடக்கும் திருமண விழா கொண்டாட்டம் வியாழன் அன்றே தொடங்கியது.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ