பாஜ எம்பிக்கள் செய்த சம்பவம்-கார்கே பகீர் | Amit Shah Ambedkar row | Kharge letter
அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசிய விவகாரம் இன்று பார்லியில் பூகம்பத்தை கிளப்பியது. அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும், காங்கிரசுக்கு எதிராக பாஜவினரும் பார்லியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திடீரென தள்ளு முள்ளு ஏற்பட்டது. பாஜ எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்தார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இன்னொரு எம்பியை ராகுல் தள்ளி விட்டதால் தான் தனக்கு இந்த கதி நேர்ந்ததாக சாரங்கி குற்றம் சாட்டினார். இதை திட்டவட்டமாக மறுத்த ராகுல், பாஜ எம்பிக்கள் தான் ஒன்று சேர்ந்து தன்னை தள்ளி விட்டனர் என்றார். பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ எம்பி மண்டை உடைந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாஜ எம்பிக்கள் மீது காங்கிரஸ் தலைவர் கார்கே திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.