/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை-மைசூரு வந்தே பாரத் எமர்ஜென்சி ஸ்டாப் | MGR Chennai Central - Mysuru | Vande Bharat
சென்னை-மைசூரு வந்தே பாரத் எமர்ஜென்சி ஸ்டாப் | MGR Chennai Central - Mysuru | Vande Bharat
சென்னையில் இருந்து மைசூருவுக்கு வந்தே பாரத் ரயில் இன்று காலை 5.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் சென்றபோது சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் நந்துநாத் என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவர் டிடிஆரிடம் சொல்ல, ஆம்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பாகவே 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நின்றிருந்தது. ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டது. ஆனால், கிருஷ்ண நந்துநாத் ரயிலை விட்டு இறங்கி நடந்தே சென்று ஆம்புலன்சில் ஏறினார்.
டிச 02, 2024