நள்ளிரவில் சுத்துபோட்ட கும்பல்: நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்! |Ambur |Murder attempt|8 Arrest
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் சில ஆண்டுகளாக ஆம்பூர் பஜாரில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு, அருண், அவரது நண்பரும் தனித்தனியே பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சோலூர் அருகே மற்றொரு டூவிலரில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், அருணை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அருண் ரத்த வெள்ளத்தில் கூச்சலிட்டார். அருணின் சத்தத்தை கேட்டு, முன்னாள் சென்று கொண்டிருந்த அவரது நண்பர் திரும்பி வருவதற்குள் வெட்டியவர்கள் தப்பி ஓடினர். படுகாயமடைந்த அருணை, அவரது நண்பர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வேலூர் ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அருணின் தாய்மாமா விஜயகுாமருக்கும், அருணுக்கும் சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது தெரிந்தது. போலீசார் அவரை பிடித்து கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.