உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் வேஷம் போட்டு நுழைந்த ஆண்: சிசிடிவி காட்சி | CCTV | ambur | theft

பெண் வேஷம் போட்டு நுழைந்த ஆண்: சிசிடிவி காட்சி | CCTV | ambur | theft

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுரா பகுதியை சேர்ந்தவர் முபாரக் பாஷா. பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இன்று மதியம் முபாரக் கடைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் அவரது மனைவி, மகள் தனியாக இருந்துள்ளனர். அப்போது பர்தா அணிந்த ஒருவர் வீட்டு வாசலில் அழைப்பிதழை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். உறவினாராக இருக்கும் என நினைத்து முபாரக் மனைவி சுல்தானா கதவை திறந்துள்ளார். ஆனால் பர்தா அணிந்து வந்தது பெண்ணே இல்லை. உள்ளே நுழைந்த வேகத்தில் பர்தாவை விலக்கிய கொள்ளையன் சுல்தானா கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினான்.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை