/ தினமலர் டிவி
/ பொது
/ அமித் ஷா - பழனிசாமி சந்திப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் | Amit sha | EPS| BJP | ADMK | Delhi meet
அமித் ஷா - பழனிசாமி சந்திப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் | Amit sha | EPS| BJP | ADMK | Delhi meet
2026 சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சிக்கிறார். ஏற்கனவே பாஜ கூட்டணியில் இருந்த பழனிசாமி, 2024ல் கூட்டணியை விட்டு வெளியேறிய பின் நடந்த லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவினார். தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களை புறக்கணித்து வரும் பழனிசாமி, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் வலுவான கூட்டணி அமைக்க, விஜயின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சரி வராத நிலையில், மீண்டும் பாஜ பக்கம் திரும்பி உள்ளார். சமீபத்தில் அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி டில்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
மார் 30, 2025