மண்டல பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமித்ஷா சூளுரை! Amit shah | Delhi Blast | BJP | PM Modi
ஹரியானாவின் பரீதாபாத்தில் வடக்கு மண்டல பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ஹரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், டில்லி முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்து பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்து ஒழிக்க உறுதியாக உள்ளது. டில்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் எந்த பாதாள உலகில் இருந்தாலும் அவர்களை விட மாட்டோம். வேட்டையாடி கண்டுபிடித்து நீதி முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்று தருவோம். வலிமையான மாநிலங்கள் மூலம் வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை. அதை களத்தில் செய்து முடிக்க மண்டல கவுன்சில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்கள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்களை எந்த நாகரீக சமூகமும் பொறுத்துக் கொள்ள முடியாது. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் பாலியல் குற்ற வழக்குகளில் விரைவான விசாரணை நடத்த வேண்டும்.