கார் வெடிப்புக்கு காரணம் என்ன? முடிவை மக்களுக்கு சொல்வோம் Delhi car blast| delhi redfort
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, இன்று மாலை 7 மணியளவில் டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு ஏற்பட்டது என்றார். இந்த வெடிப்பில் பாதசாரிகள் சிலர் காயமடைந்தனர். மற்றும் பல வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் இறந்ததாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. வெடிப்பு நடந்த 10 நிமிடங்களுக்குள் குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். NSG மற்றும் NIA குழுவினர் தடையஅறிவியல் நிபுணர்களுடன் உடன் இணைந்து முழுமையான விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் மற்றும் சிறப்பு பிரிவு போலீசாரின் பொறுப்பாளரிடம் பேசினேன். அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து சாத்தியகூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம். முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவுகளை மக்களுக்கு தெரிவிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.