பிரதமர் மோடியின் பயணத்திற்கும் தேர்தல் தேதிக்கும் தொடர்பில்லை: அமித் ஷா விளக்கம் Amit Shah Speech
எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி தொடர்பான விவாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். பிரதமர் மோடியின் பயண தேதியின் அடிப்படையில், தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை நிர்ணயிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இங்குள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிரதமரின் சுற்றுப் பயணத்திற்கும் தேர்தல் தேதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆண்டின் எந்த மாதத்திலும் பிரதமரின் பயண திட்டத்தை எடுத்துப் பாருங்கள். அவர் எப்போதும் எங்காவது சென்று கொண்டு தான் இருக்கிறார். மக்களுக்காக தொடர்ந்து உழைக்கிறார். நாடு சுதந்திரம் அடைந்த பின், நாட்டு மக்கள் நலன் கருதி அதிக பயணம் செய்யும் பிரதமராக மோடி திகழ்கிறார். பிரதமர் மோடியைப் பற்றி நான் நன்கு அறிவேன். 2001ம் ஆண்டு முதல் ஒரு நாள் கூட அவர் விடுப்பு எடுத்ததில்லை, சுற்றுலா சென்றதில்லை. தொடர்ந்து எல்லா நாட்களிலும் மக்கள் பணி ஆற்றி வருகிறார். ஒரு முறை கூட அவர் சுற்றுலா சென்று நான் பார்த்ததே கிடையாது என லோக்சபாவில் அமித் ஷா பேசினார்.