மோடியை பார்த்துதான் பாகிஸ்தான் பயப்படுகிறது amit shah| pm Modi| jammu kashmir election
ஜம்மு காஷ்மீல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மெந்தரில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் முன் எப்போதும் இல்லாத மாற்றத்தை அடைந்துள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அமைதிக்கு திரும்பி கொண்டிருக்கிறது. அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நாட்கள் எல்லாம் போய்விட்டன. அப்போது பாகிஸ்தானை பார்த்து உள்ளூர் தலைவர்கள் பயந்தார்கள். இப்போது பிரதமர் மோடியை பார்த்து பாகிஸ்தான் பயப்படுகிறது. அப்துல்லா, முப்தி, நேரு ஆகிய 3 செல்வாக்கு மிக்க குடும்பங்களிடம் தான் ஜம்மு காஷ்மீரின் ஜனநாயகம் பணயம் வைக்கப்பட்டு இருந்தது. 2014ல் வந்த மோடி தலைமையிலான அட்சி வந்திருக்காவிட்டால் இங்கு உள்ளாட்சி தேர்தல்கள் நடந்திருக்காது. தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தல் மூலம், 3 குடும்பங்களின் ஆட்சியை முடிவுக்கு வரும். மோடியின் அயராத உழைப்பால் சுமார் 30 ஆயிரம் காஷ்மீர் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். PDP, NC, காங்கிரஸ் கட்சிகள் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் ஆயுங்களை கொடுத்தன. ஆனால், பாஜக லேப்டாப்களை கொடுத்துள்ளது.