உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் பட்னவிஸ் Amruta about Devendra fadnavis| Maharashtra CM|

மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் பட்னவிஸ் Amruta about Devendra fadnavis| Maharashtra CM|

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பாஜவின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவி ஏற்றார். இதன் மூலம் ஆறாவது முறை எம்எல்ஏ மற்றும் மூன்றாவது முறை முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பட்னவிஸ் மீண்டும் முதல்வர் ஆனது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது மனைவி அம்ருதா கூறினார். மகாராஷ்டிராவை முதன்மை மாநிலமாக ஆக்குவதே பட்னவிசின் எண்ணம். வார்டு கவுன்சிலராக துவங்கி, மேயர், எம்எல்ஏ, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், துணை முதல்வர், முதல்வர் என அரசியல் வாழ்வில் படிப்படியாக முன்னேறியவர் பட்னவிஸ். மகாராஷ்டிரா மக்கள் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார் என அம்ருதா தெரிவித்தார். டாக்டர் தம்பதியின் மகளான அம்ருதா. தனியார் வங்கியின் துணைத் தலைவராக இருக்கிறார். அது தவிர பின்னணி பாடகியும் கூட. சில பாலிவுட் படங்களில் பாடல் பாடியுள்ளார். மாநில டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை