பொத்தூரில் அடக்கம்; ஆபீசில் நினைவிடம் Amstrong| BSP |HC
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆஸ்ம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். மனுவை இன்று விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், கட்சி அலுவலகம் நெரிசல் மிகுந்த இடத்தில் இருப்பதால் அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்றார். சென்னை மாநகராட்சி பரிந்துரைத்த 3 இடங்களில் உடலை அடக்கம் செய்யலாம்; பின் வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக்கொள்ளலாம் என நீதிபதி யோசனை தெரிவித்தார்.
ஜூலை 07, 2024