உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசியல் சாயம் இல்லாமல் இருக்கேன் - மவுனம் உடைத்த நடிகை ஜனனி | Janani Ashokkumar | Rs 634 Crore Scam

அரசியல் சாயம் இல்லாமல் இருக்கேன் - மவுனம் உடைத்த நடிகை ஜனனி | Janani Ashokkumar | Rs 634 Crore Scam

கடந்த தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. தற்போது திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, துறையில் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதலுக்கு லஞ்சமாக, 634 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல, டெண்டர் பணிகளில், 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து அரசுக்கும், டி.ஜி.பி., அலுவலகத்திற்கும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று கடிதங்களை எழுதினர். வழக்குப்பதிவு செய்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கூறியிருந்தனர். ஆனால், அப்போது அந்த கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதல்வராக பதவியேற்றதும், நேரு துறையில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை தீவிரமானது. கடந்த செப்டம்பர் 4ம் தேதி, நேரு, அவரது தம்பிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், நேருவின் நெருங்கிய கூட்டாளி கவிபிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாதவரம் சுதர்சனம், எபினேசர் உட்பட 13 பேர் மீது, 14 பிரிவுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே ஊழல் பணத்தின் ஒரு பகுதி டீவி சீரியல் நடிகைகளுக்கு அனுப்பப்பட்டதாவும் தகவல் வெளியானது. இதில் நடிகை ஜனனி பெயரை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியானது. இந்த நிலையில் தன்னை பற்றி பரவி வரும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து நடிகை ஜனனி விளக்கம் அளித்துள்ளார். கடந்த இரண்டு நாள்களாக என் பெயரைத் தொடர்பு படுத்தி பரவும் 634 கோடி ஊழல் கதைகள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன். நான் இதில் ஈடுபடவில்லை. நான் அரசியல் சாயம் இல்லாமல் இருக்கிறேன். யாருக்கும் ஆதரவும் இல்லை, யாருடனும் பழகவில்லை. என்னை பற்றி பரவும் வதந்திகள் உண்மையில்லை. உண்மைத் தன்மை தெரியாமலும் போதுமான ஆதாரங்கள் இல்லாமலும் எப்படி குற்றம் சுமத்துகிறார்கள்? #JananiAshokkumar #JananiAshokkumarClarification #JananiAshokkumarStatement #634CroreScam #ScamClarification #RumorsRefuted #FalseAllegations

அக் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !