உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொய்களால் கட்டப்பட்ட கோட்டை நீண்ட நாள் நீடிக்காது | Anbumani | DMK Failed | CM Stalin | PMK

பொய்களால் கட்டப்பட்ட கோட்டை நீண்ட நாள் நீடிக்காது | Anbumani | DMK Failed | CM Stalin | PMK

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதன்மூலம் 891 தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதுடன், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் தமிழக அரசு வெளியிட்ட இந்த சாதனை அறிக்கை மூலம், அரசின் தில்லு முல்லுகள் அம்பலமாகி உள்ளன. தனது மோசடியை திமுக அரசே ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக அரசு பெருமை கொள்வது போன்று 60 சதவீத தொழில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தால் 18.60 லட்சம் பேருக்கு தனியார் தொழிற்சாலைகளில் வேலை கிடைத்திருக்க வேண்டும்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி