உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் பாஜ முக்கிய தலைவர்களை சந்திக்க அன்புமணி திட்டம்! Anbumani | PMK |Delhi Visit |Ramadoss

டில்லியில் பாஜ முக்கிய தலைவர்களை சந்திக்க அன்புமணி திட்டம்! Anbumani | PMK |Delhi Visit |Ramadoss

பா.ம.க.வில் அப்பா - மகன் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருவர் நிர்வாகியை நீக்கியும், மற்றொருவர் அவர் நீடிப்பார் என்றும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றால் மட்டுமே, இப்பிரச்னை முடிவுக்கு வரும் என ராமதாஸ் உறுதியாக கூறி வருகிறார். வயது முதிர்வால், ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்; அவரை சுற்றி மூன்று தீய சக்திகள் உள்ளன. பா.ம.க. தலைவரான தனக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அன்புமணி டில்லி சென்றார். இது பா.ம.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பா.ம.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி. பதவி, வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் 21ல் பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குகிறது.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை