அன்புமணி வெளியிட்ட பரபரப்பு தகவல் | PMK | VCK | ANBUMANI
பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை காவல்துறை காக்க முயல்வது கண்டிக்கத்தக்கது என்று அக்கட்சி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், சங்கர், விஜயகணபதி உள்ளிட்ட நால்வர் கடந்த 16ம் தேதி திருமால்பூரில் உள்ள விளையாட்டுத் திடலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பாமகவை சேர்ந்தவர்கள். அப்போது அங்கு வந்த திருமால்பூரைச் சேர்ந்த பிரேம், மணிகண்டன், கோபி, வெங்கடேசன், கீழ்வெண்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், தசரதன் ஆகிய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேரும் அங்கு சென்று பாமகவினரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளனர்.
ஜன 17, 2025