உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதுச்சேரியின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்த்து அசந்த மக்கள் | Photo exhibition | 400 years of

புதுச்சேரியின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்த்து அசந்த மக்கள் | Photo exhibition | 400 years of

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு பாரம்பரியம்மிக்க நகராட்சி மேரி கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சுற்றுலாத்துறை சார்பில் புதுச்சேரியின் வரலாற்று புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியை முதல்-வர் ரங்கசாமி 1ம் தேதி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் புதுவையின் 400- ஆண்டு கால வரலாறு, கட்டடக்கலை, பண்பாட்டு வளர்ச்சி பற்றிய புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பல காலனி ஆட்சியாளர்களின் கீழ் புதுச்சேரி கடந்து வந்த வளர்ச்சி முதல் தற்போதைய மறு உருவாக்கம் வரை உள்ள புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக கடற்கரைக்கு வரும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை கண்டுகளித்தனர். புதுச்சேரியின் பாரம்பரியமிக்க மேரி கட்டடத்தில் நிரந்தர காட்சியகம் அமைக்க வேண்டும் ன வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.. அழிவின் விளிம்பில் உள்ள புதுச்சேரி வரலாற்றை விவரிக்கும் படங்களை பாதுகாத்து இந்த கண்காட்சி அரங்கில் வைக்க வேண்டும் எனவும் கேட்கின்றனர்.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை