உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மிக்ஸி பழுது பார்ப்பவர் போல் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்

மிக்ஸி பழுது பார்ப்பவர் போல் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்

ஆந்திராவின் அன்னமையா மாவட்டம் ராயச்சொட்டி நகரில் பதுங்கியிருந்த அல் உம்மா பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரை 2 தினங்களுக்கு முன் தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களில் அபுபக்கர், தமிழகத்தில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள், இந்து அமைப்பு தலைவர்களின் கொலைகளில் மூளையாக செயல்பட்டவர். 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது பிடிபட்டு உள்ளனர். இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக ராயச்சோட்டி நகரில், மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்ப்பது போன்ற தொழில்கள் செய்வதுபோல், போலி அடையாளத்துடன் பதுங்கி இருந்துள்ளனர். அவர்கள் கைதான பின், வீடுகளில் ஆந்திரா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவை ஐஇடி எனப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவை. ஒரு சூட்கேஸ் வெடிகுண்டு, மற்றொரு சூட்கேஸில் ஐஇடி வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர, வாக்கி டாக்கி,ரோடியோ உபகரணங்கள், மொபைல் போன், செக்புக், இந்திய நகரங்களின் வரைபடங்கள், கையேடு குறியீடு புத்தகங்கள், ஹேக்கிங் சாப்ட்வேர் உள்ளிட்டவையும் சிக்கின. அங்கிருந்தபடியே அவர்கள் ஏதேனும் சதிச்செயலில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். பயங்கரவாதிகள் வீடுகளில் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், வெடிகுண்டுகளை நிபுணர்கள் மைதானத்திற்கு கொண்டு சென்று அவற்றை அழித்தனர்.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை