உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முரசு புயல் பாதிப்பு உதவி கேட்ட ஆந்திர முதல்வர் | Andhra CM | Chandrababu Naidu | CM Vijay

முரசு புயல் பாதிப்பு உதவி கேட்ட ஆந்திர முதல்வர் | Andhra CM | Chandrababu Naidu | CM Vijay

வங்கக்கடலில் உருவாகி உள்ள முரசு புயல் தீவிர புயலாக மாறி மணிக்கு 25 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே-வடகிழக்கே சுமார் 200 கி.மீ தொலைவிலும், ஆந்திரா நெல்லூருக்கு கிழக்கு -தென்கிழக்கே 210 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து இன்று இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திரா நெல்லுார் - நரசப்பூர் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டு உள்ளது. ஆந்திரா நோக்கி நகரும் முரசு புயலால் அங்கு பாதிப்பு அதிக அளவில் இருக்கும். கனமழை, சூறாவளி காற்றால் ஆந்திராவில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளன. ஏற்கெனவே அர்னாப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் அங்கு நடந்து வருகிறது. மின் கட்டமைப்புகளை சீரமைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக அரசின் உதவியை நாடி உள்ளார். முதல்வர் விஜய்க்கு போன் செய்து பணியாளர்களையும், இயந்திரங்களையும் அனுப்பி வைக்க உதவி கேட்டுள்ளார். முதல்வர் விஜயும் இதற்கு சாதகமான பதிலை அளித்ததாக சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். #AndhraCM | #ChandrababuNaidu | #CMVijay | #IMD | #Cyclone | #CyclonMurasu

நவ 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை