உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேலூர் ஆஸ்பிடலில் கர்ப்பிணியின் நிலை என்ன? Andhra Woman pushed from train intercity express in Tami

வேலூர் ஆஸ்பிடலில் கர்ப்பிணியின் நிலை என்ன? Andhra Woman pushed from train intercity express in Tami

ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த 36 வயது பெண், திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கணவருடன் திருப்பூசில் வசிக்கிறார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், தாயைப் பார்க்க சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தார். கோவையிலிருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மகளிர் பெட்டியில் கடந்த வியாழனன் பகலில் பயணித்தார். ரயில் ஜோலார்பேட்டை வந்ததும் பெட்டியில் இருந்த மற்ற பெண்கள் இறங்கிவிட்டனர். கர்ப்பிணி மட்டும் தனியாக இருந்தார். ரயில் புறப்பட்ட பிறகு மர்ம ஆசாமி பெட்டியில் ஏறினான். அவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி, இது பெண்கள் பெட்டி; ஏறக்கூடாது என கண்டித்துள்ளார். உடனே அவன், வண்டி மூவ் ஆயிடுச்சி; நான் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடுகிறேன் என்றான். அதற்கு மேல் கர்ப்பிணி எதுவும் சொல்லவில்லை. அரை மணி நேரம் அமைதியாக இருந்த ஆசாமி, திடீரென தன் கொடூர முகத்தை காட்டினான். பாத்ரூமில் இருந்து நிர்வாணமாக வெளியே வந்த அவன், கர்ப்பிணி மீது பாய்ந்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டான். அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி கதறினார்.

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ