வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வரும்காலங்களில் இதுவே துப்பாக்கி கலாச்சாரமாகவும் வழிவகுக்கும் .
கோயில் விழாவில் விபரீதம் 2 பக்தர்கள் உயிரிழந்த சோகம் | Andhra|Devaragattu |Banni Utsav |violent
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் 800 அடி உயர தேவரகட்டு மலைபகுதியில் மாலா மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் தசரா விழாவில் நள்ளிரவில், மாலம்மா மற்றும் மல்லேஸ்வர சுவாமியின் திருமண நிகழ்வு நடைபெறும். அதன்பிறகு, சாமி ஊர்வலம் விளக்கு வெளிச்சத்தில் நடக்கும். சாமி சிலைகளை பாதுகாக்க, ஒருபுறம் 3 கிராமங்கள், மறுபுறம் 7 கிராமங்கள் என மொத்தம் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரு குழுவாக பிரிந்து, குச்சிகளுடன் சண்டையிடுவதுபோல ஒரு சடங்கு நடத்தப்படும். காலம் காலமாக இந்த நிகழ்வு நடக்கிறது. அதை பன்னி உத்சவ் என ஆந்திர மக்கள் அழைக்கின்றனர். இந்த முறை தேவரகட்டுவில் தசரா விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்தன. விழாவின் ஒரு பகுதியாக நடக்கும் பன்னி திருவிழாவுக்கு 2 லட்சம் பேர் வந்தனர். நள்ளிரவில் மாலா - மல்லேஸ்வர சுவாமியின் திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில் தடியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சடங்கு நடந்தது. ஒரு பக்கம் நெரானி, நெரானிகிடண்டா மற்றும் கோதபேட்டா கிராமங்களைச் சேர்ந்த மக்கள். மறுபுறம் அரிகேரா, அரிகேரதண்டா, சுலுவாய், எல்லார்த்தி, குருகுண்டா, பிலேஹால் மற்றும் விருப புரம் ஆகிய 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் என இரு குழுவாக இருந்தனர்.
வரும்காலங்களில் இதுவே துப்பாக்கி கலாச்சாரமாகவும் வழிவகுக்கும் .