அனிருத்-காவ்யா திருமணத்தால் உண்டான பந்தம் | Anirudh Ravichander Kavya Maran Greece Wedding
திரைப்பட இசையமைப்பாளர் அனிருத், சன் குழும தலைவர் கலாநிதி மகள் காவ்யா திருமணம் மூலம் தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், நடிகர் ரஜினியும் உறவினர்களாகி உள்ளனர். அனிருத், காவ்யா திருமணம். கடந்த, 11ம் தேதி கிரீஸ் நாட்டில் நடந்தது. ஸ்டாலின் குடும்பத்தில் அவரது மனைவி துர்கா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல ரஜினி, அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, அவரது கணவர் விசாகன் பங்கேற்றனர். ரஜினியின் மனைவி லதாவின் தம்பி ரவி ராகவேந்திராவின் மகன் தான் அனிருத். அனிருத்துக்கு ரஜினி மாமா முறை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரத்தம்மாள் மகன் முரசொலி மாறன். அவரது மகன் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி. அவரது மகள் காவ்யா. அவரை அனிருத் மணந்துள்ளதால், காவ்யா ரஜினிக்கு மகளாகிறார். காவ்யாவின் தந்தை கலாநிதி, ரஜினிக்கு சகோதரர் முறையாகிறார். கலாநிதி, ஸ்டாலினுக்கு மருமகன் என்பதால், ரஜினிக்கும் சொந்தக்காரரகி விட்டார். ரஜினியும், கலாநிதியும் திரையுலகில் நெருக்கமான நண்பர்கள். கலாநிதியின் சொந்த நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ரஜினி நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி அடையும் போது, அவருக்கு பி.எம்.டபிள்யூ., காரை, கலாநிதி பரிசாக வழங்கி பாராட்டுவார். இதுவரை அவர்களுக்குள் எந்த உறவு முறையும் இல்லாமல் இருந்தது. அனிருத் - காவ்யா திருமணத்திற்கு பின், ரஜினி குடும்பமும், ஸ்டாலின் குடும்பமும் உறவு முறையில் இணைந்துள்ளது. #AnirudhKavyaWedding #Rajinikanth #MKStalin #KalanithiMaran #TamilNaduPolitics #Kollywood #SunGroup #GreeceWedding #FamilyRelations #CurrentAffairs #NewsUpdates #India #TNNews