குஜராத்தில் வாக்காளர்களை அசர வைத்த சம்பவம் | Ankit Soni | Nadiad | Gujarat
நாடு முழுவதும் 94 லோக் சபா தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. குஜராத் கேதா தொகுதிக்கு உட்பட்ட நந்தியாட் பகுதியில் மாற்றுதிறனாளி அங்கித் சோனி ஓட்டு போட்டார். இவர் 20 வருடங்களுக்கு முன் மின்சாரம் தாக்கி இரண்டு கைகளையும் இழந்தார். ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் உதவியால் கால்கள் மூலம் அன்றாட பணிகளை செய்கிறார். இவரது இடது காலிலும் 4 விரல்கள் இல்லை. கட்டை விரல் மட்டுமே உள்ளது. காலில் உள்ள 6 விரல்களை மட்டுமே வைத்து கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டபடிப்பு முடித்துள்ளார்.
மே 07, 2024