பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் கைது Anna University | Chennai | Student
ென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு மாணவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்தார். அதில், பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு, 3 ஆண்டுகளாக தமக்கு நேரடியாகவும், செல்போனில் தொடர்பு கொண்டும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறியுள்ளார். இரவு நேரங்களில் ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்புகிறார். வீடியோ கால் செய்து ஆபாசமாக நடந்து கொள்கிறார். என்னுடைய தோழிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதை வெளியில் சொன்னால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார் என மாணவி புகாரில் தெரிவித்தார். மாணவி புகார் மீது, நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தை கண்டித்து, பல்கலைக்கழக வளாகம் முன், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் ஞானவேல் பாபுவை அண்ணா பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்தது. இந்த சூழலில், நெல்லையில் இருந்த அவரை போலீசார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். #AnnaUniversity #Student #PoliceStation #Chennai #Professor #Kotturpuram #Crime #suspend #UniversityStudent