உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்தது என்ன? | Anna University | Chennai Police | CCTV

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்தது என்ன? | Anna University | Chennai Police | CCTV

புதருக்குள் இழுத்து சென்று கொடுமை நண்பன் கண் முன்னே நடந்த கொடூரம் சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மெயின் கேம்பஸ் இயங்கி வருகிறது. இங்கு விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவியும், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாயன்று இரவு மாணவியும், அவரது நண்பரும் கல்லூரி அருகிலுள்ள சர்ச்சில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்றுள்ளனர். கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நள்ளிரவை தாண்டி பல்கலைக்கழக வளாகத்திற்கு திரும்பினர். விடுதி அறைக்கு செல்லும் முன் இருவரும் தனிமையில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது 2 மர்ம நபர்கள் அவர்களிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மாணவரை தாக்கிவிட்டு மாணவியை புதருக்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் ஆடைகளை களைந்து வீடியோ எடுத்து மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை