உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசையே தீர்த்து கட்டும் அவலம்: அண்ணாமலை கண்டனம் | Annamalai | BJP | Crime | Madurai Police | Usil

போலீசையே தீர்த்து கட்டும் அவலம்: அண்ணாமலை கண்டனம் | Annamalai | BJP | Crime | Madurai Police | Usil

மதுரை உசிலம்பட்டி போலீஸ் கான்ஸ்டபிளான 40 வயது முத்துக்குமார், இன்று மதியம் முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது கஞ்சா வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்த பொன்வண்டு என்பவர் நண்பர்களுடன் அங்கு மது குடித்துக் கொண்டிருந்துள்ளார். அவருக்கு முத்துக்குமார் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது பொண்வண்டு உடன் வந்த நண்பர்கள் முத்துகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அங்கிருந்து வெளியேறிய முத்துக்குமார், கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். பின் தொடர்ந்து வந்த பொன்வண்டு கும்பல் கான்ஸ்டபிள் முத்துக்குமாரை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தமிழகமெங்கும், மதுவாலும், போதை பொருட்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டபோதும் முதல்வர் தூங்கிக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குற்றங்களைத் தடுக்க முடியாமல் போலீசாரின் கைகள் கட்டப்பட்டு, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. உண்மையில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்திருக்குமேயானால், மது விற்பனையை முறைப்படுத்தி இருக்க வேண்டும்.

மார் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி