உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெடிக்கும் மோதல் இனிப்பாய் மலருமா? அண்ணாமலை vs பழனிசாமி | Annamalai | Bjp | Palanisami | ADMK | ADMK

வெடிக்கும் மோதல் இனிப்பாய் மலருமா? அண்ணாமலை vs பழனிசாமி | Annamalai | Bjp | Palanisami | ADMK | ADMK

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கும் இடையேயான குடுமி பிடி சண்டை சமீபமாக உச்சம் தொட்டது. அண்ணாமலை படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதால் இருவருக்குமான வார்த்தை போர் ஓய்ந்தாலும், இருதரப்பு நிர்வாகிகள் அடங்கவில்லை. 2 பேரின் உருவ பொம்மையை எரித்து தத்தம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் அண்ணாமலையை மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர். இந்த சூழலிலும் அதிமுக, பாஜ கூட்டணி உருவாக வாய்ப்பிருக்கிறது. திமுகவை எதிர்த்து வெற்றி பெற தமிழகத்தில் அதிமுக, பாஜ கூட்டணி அவசியம். அதனாலேயே, தங்கள் கட்சி தலைவரை அண்ணாமலை விமர்சித்த பின்னும் அமைதி காப்பதாக அதிமுகவின் சில தலைவர்கள் சொல்கின்றனர். தமிழக அரசியலை நீண்ட காலம் கணித்து, அதிலேயே ஊறிய அவர்களின் காரணத்தை முழுமையாக புறக்கணித்து விட முடியாது. அவர்கள் எதிர்பார்ப்பு அல்லது கணிப்பு பிரகாரம், கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதா என அதிமுக, பாஜ தலைவர்கள் கூறியதாவது; கொள்கை ரீதியிலான பிரச்னையில் இரு கட்சிகளும் முரண்பட்டு நிற்கவில்லை. சிறுபான்மையின ஓட்டுக்கள் பாஜவால் தங்கள் பக்கம் வரவில்லை என்ற ஆதங்கத்திலும்,

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ