/ தினமலர் டிவி
/ பொது
/ சொன்னதை முடித்தார் அண்ணாமலை: இதுதான் ஆரம்பம் | Annamalai | BJP | Palani Temple
சொன்னதை முடித்தார் அண்ணாமலை: இதுதான் ஆரம்பம் | Annamalai | BJP | Palani Temple
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுக்கு நீதி கேட்டு கடந்த டிசம்பரில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். திமுக எனும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும்வரை நான் செருப்புப் போடப்போவதில்லை. முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன் என கூறினார். விரதம் முடிவடைந்த நிலையில் பழநி முருகன் கோயிலுக்கு மயில் காவடி சுமந்து வந்து அண்ணாமலை வழிபட்டார். திருஆவினன்குடி கோயிலில் இருந்து காவடியை தோளில் சுமந்தபடியே மலையேறி சென்று முருகன் சன்னதியை அடைந்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜவினர் அண்ணாமலை உடன் சென்றனர். வழிநெடுக அவரை பார்த்த பக்தர்கள் கை கொடுத்து வரவேற்றனர்.
பிப் 11, 2025