மெட்ரோ திட்டத்துக்கு 50% நிதி; அண்ணாமலை வலியுறுத்தல் | Annamalai | second phase of the Chennai Metro
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது; 2020ல் சென்னையின் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால் மத்திய அரசின் நிதி ஒப்புதல் பெறுவதற்கு முன்பே, இதை தங்களின் திட்டமாக கருதி மாநில அரசு செயல்பட தொடங்கியது. இந்த திட்டத்திற்கு மொத்தம் 63 ஆயிரத்து 246 கோடி நிதி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் பங்களிப்பு இல்லாமல் தானே திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. 4 ஆண்டுகள் ஆகியும் மூன்றில் ஒருபங்கு பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால் மேலும் நிதி ஒதுக்க முடியாமல் தமிழக அரசு திணறுகிறது.