என்ன தான் நினைக்கிறீங்க? ஸ்டாலினை சாடும் அண்ணாமலை | Annamalai | Sivaganga Bjp
சிவகங்கை வேலாங்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். பாஜ கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். சொந்த ஊரில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். நேற்று இரவு டூவீலரில் இளையான்குடி ரோட்டில் சென்றார். எதிரே வந்த மர்ம நபர்கள் செல்வகுமாரை வழிமறித்து வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். அந்த வழியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் செல்வகுமார் ஸ்பாட்டிலேயே இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து செல்வகுமார் உடலை ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். எஸ்பி டோங்கரே பிரவீன் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் கலைந்து சென்றனர். செல்வகுமார் கொலைக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.