உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர், கல்வி அமைச்சர் எப்போது உணர்வார்கள்? அண்ணாமலை கேள்வி | Annamalai | TN Bjp | DMK | Teachers

முதல்வர், கல்வி அமைச்சர் எப்போது உணர்வார்கள்? அண்ணாமலை கேள்வி | Annamalai | TN Bjp | DMK | Teachers

தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: பல ஆண்டு கால கோரிக்கைக்கு பின் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி ஜனவரி 27ல் அரசாணை வெளியிட்டது திமுக அரசு. ஆனால் இந்த பணி நிரந்தரம் குறித்தவற்றை, அரசு ஊழியர்களுக்கான IFHRMS சாப்ட் வேரில் இன்னும் திருத்தம் செய்யவில்லை. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு IFHRMS சாப்ட் வேரில் பணியிடத்தின் தன்மை, தற்காலிகம் என்றே இருப்பதால், சுமார் 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவிலை. இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர், முதல்வர் தனிப்பிரிவு என பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் இன்னும் தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர். அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு அவை முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என சிறிதும் அக்கறை இல்லாமல், கையாலாகாத நிலையில் இருக்கிறது திமுக அரசு.

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !