உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேட்ட 3 கேள்விகள் annamalai| bJP| dharmendra pradhan| dmk mps| parliament

ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேட்ட 3 கேள்விகள் annamalai| bJP| dharmendra pradhan| dmk mps| parliament

ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேட்ட 3 கேள்விகள் தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி வழங்காதது தொடர்பாக, லோக்சபாவில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மும்மொழி கொள்கை ஏற்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு பாழடிக்கிறது; தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என கூறினர். திமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வார்த்தையை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாபஸ் பெற்றார். எனினும் மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அவரது அறிக்கை: தம்மை மன்னர் என எண்ணிக்கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும். தமிழகத்துக்கு நிதி தராமல் ஏமாற்றும் நீங்கள் எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்பதா? தமிழக மக்களை அவமதிக்கிறீர்கள்; இதை பிரதமர் ஏற்கிறாரா? தேசிய கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரித்து விட்டது என எனக்கு கடிதம் எழுதியதே நீங்கள் தானே? நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுவோம்; உங்களை பேல நாக்பூரின் செயற்களுக்கு அல்ல. உங்கள் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த முன்வரவில்லை. எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா? முடியாதா என பதில் சொல்லுங்கள் என ஸ்டாலின் கேட்டு இருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு 3 கேள்விகள் கேட்டு இருக்கிறார். திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை