அண்ணாமலைக்கு பாஜ மூத்த தலைவர்கள் கொடுத்த அதிர்ச்சி-பரபரப்பு | BJP vs ADMK | Annamalai | Amit Shah
கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பாஜவோடு இணக்கமான கூட்டணி கட்சியாகத்தான் அதிமுக இருந்தது. ஆனால் அதிமுகவை ஊழல் கட்சி என அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்தது கூட்டணி முறிவுக்கு வழி வகுத்தது. இதனால் லோக்சபா தேர்தலில் 2 கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஒரு சீட் கூட பெற முடியவில்லை. 40 தொகுதியையும் திமுக கூட்டணி அள்ளியது. இதனால் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தமிழக பாஜ மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலைக்கு துளியும் விருப்பமில்லை. இருப்பினும் காலம் வரும் என்று மூத்த நிர்வாகிகள் காத்திருந்தனர். அண்ணாமலை வெளிநாடு போய் இருக்கும் இந்த நேரத்தில், கூட்டணிக்கான வேலைகளை துவங்கி விட்டனர். இதுகுறித்து பாஜ வட்டாரம் கூறியது: சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக அண்ணாமலை லண்டன் சென்று விட்டார்.