பாஜ போராட்டத்துக்கு எதிர்வினை ஆற்றிய திமுக annamalai poster| tasmac scam|dmk| bjp
தமிழகத்தின் டாஸ்மாக் மதுவிற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கண்டித்து, டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜவினர் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், அக்கட்சி தலைவர்களை போலீசார் வீட்டில், வழியில் தடுத்து கைது செய்தனர். கைதான மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் தொடரும் என கூறியிருந்தார். அதன்படி, டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்டும் போராட்டத்தை பாஜவினர் முன்னெடுத்துள்ளனர். இது அப்பா கடை, 1000 கோடி ஊழல், டாஸ்மாக் குற்றவாளி போன்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டாலின் போட்டோவை ஒட்டி வருகின்றனர். இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் போஸ்டரை திமுகவினர் ஒட்டி உள்ளனர். அதில், அண்ணாமலை சாட்டையால் அடித்து கொள்ளும் படம் இடம்பெற்றுள்ளது. சங்கிகளின் கவனத்திற்கு என்ற தலைப்பில் இக்கடையில் தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுவகைகள் விற்கப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட டாஸ்மாக் கடைகளிலேயே பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதை கவனத்தில் கொள்ளாமல் திமுகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.