உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் போலீஸ் வன்கொடுமை: பொங்கி எழுந்த அண்ணாமலை | Annamalai Bjp | Cm Stalin

பெண் போலீஸ் வன்கொடுமை: பொங்கி எழுந்த அண்ணாமலை | Annamalai Bjp | Cm Stalin

annamalai bjp cm stalin woman cop policewoman sexual harassment Pazhavanthangal railway station chennai police crime பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் 25 வயது பெண் போலீசின் செயினை பறித்த ஆசாமி, பாலியல் தொல்லையும் கொடுத்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதல்வர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

பிப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !