உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3வது மொழி பற்றி மாணவர்களிடம் கருத்து கணிப்பு நடத்துங்கள் | Annamalai | State president | BJP | CM S

3வது மொழி பற்றி மாணவர்களிடம் கருத்து கணிப்பு நடத்துங்கள் | Annamalai | State president | BJP | CM S

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி இருந்தார். அதற்கு தமிழக அரசு வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது. மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே 3வது மொழியாக கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி. ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக மற்ற இந்திய மொழி ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். இருந்தாலும் அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கலாம். தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி, எந்தெந்த மொழிகளை கற்க விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதற்கான ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்க வேண்டும். திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம். கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய அரசு உதவ வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !