பினராயி, சிவகுமாருக்கு சிகப்பு கம்பளமா? அண்ணாமலை ஆவேசம் Annamalai | Black flag | Agitation |Tamil
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி வரும் முதல்வர் ஸ்டாலின் நாளை தென்மாநில தலைவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தை சென்னையில் நடத்துகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் நடத்த உள்ள கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு தோறும் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை, கொலை நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றம் நடக்காத நகரமே இல்லை, திமுக ஆட்சிக்கு எதிராக மக்களிடம் எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற மற்ற மாநில கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு, நாளை ஒரு மெகா நாடகம் நடத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் கற்பனையான பயத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்