பஞ்சாயத்துகள் ஓவர்: அண்ணாமலைக்கு உச்ச பதவி | Annamalai | BJP | ADMK
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதையடுத்து பாஜவுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின் போது மனக்கசப்பால் கூட்டணியை விட்டு விலகி இருந்த அதிமுக மீண்டும் சேர்ந்துள்ளது. இதனால் இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மனஸ்தாபங்களை களையும் முயற்சிகள் நடக்கிறது. அதிமுக, பாஜ நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏப் 13, 2025