/ தினமலர் டிவி
/ பொது
/ நாங்கள் மீண்டும் அதை ஞாபகப்படுத்த வேண்டுமா? | Annamalai | DMK | MKStalin | New Bill
நாங்கள் மீண்டும் அதை ஞாபகப்படுத்த வேண்டுமா? | Annamalai | DMK | MKStalin | New Bill
பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது கருப்பு மசோதா. இன்று கருப்பு நாள். ஜனநாயகத்தின் அடிவேரையே தாக்கும் மசோதாவை நான் கண்டிக்கிறேன். சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்குகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்து உள்ளார். பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை உங்கள் வெட்கமற்ற அரசு, இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைத்துக் கொண்டதை விட இது மோசமானது இல்லை.
ஆக 20, 2025