தினமலர் நிகழ்ச்சியில் மாணவிக்கு அண்ணாமலை அட்வைஸ் annamalai k IAS dinamalar daily special programme
தினமலர் நாளிதழ் சார்பில் நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ் நிகழ்ச்சி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக தமிழக முன்னாள் டி.ஜி.பி ரவி, பாஜ மாநில தலைவரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐஏஎஸ் தேர்வெழுதும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அண்ணாமலை பேசி முடித்ததும் பலர் சென்று அண்ணாமலையிடம் ஆட்டோகிராப் வாங்கினர் ஐஏஎஸ் ஆகும் கனவோடு கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மலையரசி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அண்ணாமலையுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும்; செல்பி எடுக்க வேண்டும் என மலையரசிக்கு நீண்ட நாளாக ஆசை. ஆனால், அவரைச் சுற்றி நிற்கும் கூட்டத்தைப் பார்த்ததும் அண்ணாமலையை இன்றும் பார்க்க முடியாமல் போய் விடுமோ பேச முடியாமல் போய் விடுமோ என கலங்கி நின்றார். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அழத் தொடங்கி விட்டார். இதைப்பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மலையரசியை அண்ணாமலையிடம் அழைத்துச் சென்றனர். ஏம்மா அழறீங்க என அண்ணாமலை கேட்டதும், சார் உங்க கூட ஒரு படம் எடுத்துக்க ரொம்ப நாளா ஆசை என்றார் மலையரசி. உத்வேகம் தரும் உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க கூட படம் எடுக்க முடியாதோனு நினைச்சி அழுதுட்டேன் சார் என மலையரசி கூறியதும், இனிமே ஆழக்கூடாது என அண்ணாமலை கூறினார். பெண்கள் தைரியமா இருக்கணும்; தன்னம்பிக்கையோடு யுபிஎஸ்சி பரீட்சை எழுதுங்க என்னை மாதிரி நீங்களும் பெரிய அதிகாரியா வர முடியும் என கூறி வாழ்த்தினார். மலையரசியுடன் போட்டோ எடுத்த அண்ணாமலை, ஆட்டோகிராப்பும் போட்டுக்கொடுத்தார். அப்போது, அண்ணாமலை காலில் விழுந்து மலையரசி ஆசிபெற்றார்.