மேகதாது அணைக்கு எதிராக முதல் ஆக்சன்: களமிறங்கும் முதல்வர் | Anti Mekedatu Dam Resolution |
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி நீரால் பயன்பெறும் கேரளா, புதுச்சேரி அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சிவக்குமார், மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் டில்லி சென்ற அவர், பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலை சந்தித்து மேகதாது அணை திட்டத்திற்கான அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினார். இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என சட்டசபையில் அரசு அறிவித்தது இருந்தது. அடுத்து மேகதாது அணை தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறி தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. #MekedatuDam #TNAssembly #CMVijay #CauveryWaterDispute #SaveCauvery #TamilNaduPolitics #TNAssemblyResolution #ThalapathyVijay #KarnatakaVsTamilNadu #FarmersWelfareTN